இந்திய அணியின் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா: நாளை கடைசி டெஸ்ட் நடைபெறுமா?

இந்திய அணியின் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா: நாளை கடைசி டெஸ்ட் நடைபெறுமா?
இந்திய அணியின் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா: நாளை கடைசி டெஸ்ட் நடைபெறுமா?
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானதால் இந்திய அணி தனது இறுதிகட்ட பயிற்சியை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நாளை 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிஸியோதெரபிஸ்ட்டான யோகேஷ் பர்மருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்திய அணியைச் சேர்ந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் லண்டனின் ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுசெய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் விராட் கோலியின் அணி மூன்று முக்கிய நபர்களின்றி போட்டியில் கலந்துகொண்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் மூவரும் தற்போது இந்திய அணியுடன் மான்செஸ்டருக்கு பயணிக்கவில்லை.

திங்கள்கிழமை மான்செஸ்டருக்கு வந்திறங்கிய இந்திய அணி செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. தற்போது கடைசி நாளை பயிற்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உணவு மற்றும் பிறசெயல்களுக்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்டபோது, இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகள் நடைபெறுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com