இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டரான சாம் குரனை ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சாம் குரன், இந்தாண்டு சென்னை அணியால் விடுவிக்கப்பட்டார்.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸை ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடஸ் அணி. அதேபோல நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
மேலும், ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி. இங்கிலாந்து அணியின் இயான் மார்கனை தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. மேலும், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கிறிஸ் லின்னை ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.