யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து மோதல்

யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து மோதல்
யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டியில் இத்தாலி - இங்கிலாந்து மோதல்
Published on

இங்கிலாந்து அணி யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள புகழ் பெற்ற வெம்பிளி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியில் டென்மார்க் வீரர் டேம்ஸ்கார்டு 30-வது நிமிடத்தில் கோல் போட்டு தன் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் 39-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் சைமன் ஜேர் போட்ட சுய கோல் மூலம் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கூடுதல் கோல் போடாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதில் 104-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரி கேன் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இத்தாலியை இங்கிலாந்து சந்திக்கிறது. சர்வதேச கால்பந்து தொடர் ஒன்றில் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது 55 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை. இதற்கிடையே தங்கள் அணியின் வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com