கறுப்பின சர்ச்சைக்கு மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கால்பந்து சங்கம்

கறுப்பின சர்ச்சைக்கு மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கால்பந்து சங்கம்
கறுப்பின சர்ச்சைக்கு மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கால்பந்து சங்கம்
Published on

கறுப்பின வீராங்கனைகள் குறித்து இங்கிலாந்து மகளிர் அணியின் மேலாளர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்காக, மன்னிப்பு கோருவதாக அந்நாட்டு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியின் மேலாளரான மார்க் சாம்ப்சன், நைஜீரியாவில் பிறந்தவரான எனியோலா அலுகோ என்ற வீராங்கனையிடம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அத்துடன் அலுக்காவின் உறவினர்கள் எபோலா வைரஸை மைதானத்திற்குள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் சாம்ப்சன் கேலி செய்திருந்தார். இதேபோல் மற்றொரு வீராங்கனை ட்ரூ ஸ்பெசிடமும் தேவையற்ற விமர்சனங்களை சாம்ப்சன் முன்வைத்திருந்தார். இதுகுறித்து இங்கிலாந்து கால்பந்து சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திய அந்நாட்டு நாடாளுமன்றம், கடும் கண்டத்தை தெரிவித்தது. இதற்கிடையே மேலாளர் பொறுப்பில் இருந்து சாம்ப்சனும் நீக்கப்பட்டார். இந்நிலையில் கறுப்பின வீராங்கனைகள் குறித்த மேலாளர் பேச்சுக்கு, இங்கிலாந்து கால்பந்து சங்கம் மன்னிப்புக் கோரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com