அதிரடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் - தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்

அதிரடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் - தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்
அதிரடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் - தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்
Published on

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலினால் பார்வையாளர்களின் வருகையின்றி நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

கடந்த 16ஆம் தேதியன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார். 

கேப்டன் ஜோ ரூட்டின் வருகை இங்கிலாந்தின் பேட்டிங் லைனுக்கு வலு சேர்க்க நிதானமாக ரன்களை சேர்த்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். 

தொடக்க  ஆட்டக்காரர் டாம் சிப்லேவின் சதம் இங்கிலாந்தின் இன்னிங்க்ஸிற்கு அடித்தளம் அமைத்தது. ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அமர்க்களமாக ஆடி சதம் அடிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களில் பிராத்வெய்ட், சேஸ் மற்றும் ப்ரூக்ஸ் மட்டுமே நம்பிக்கையளிக்கும் விதமாக ஆடினார். இருந்தாலும் 287 ரன்களில் அந்த அணி ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடி வருகிறது. அதிரடி ரன் குவிப்பிற்காக பென் ஸ்டோக்ஸும், பட்லரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் ஸ்டோக்ஸ் அவுட்டாகாமல் விளையாடி வருகிறார். 

கடைசி நாளான இன்று 300 அல்லது 350 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து வெற்றி பெறவோ அல்லது சமனில் முடியவோ தான் அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com