சிவப்பு ‘ஜெர்ஸி நம்பர், தொப்பி’-யுடன் ஆடும் ஆஸி,.-இங். - பின்னணியில் சோகக் கதை..!

சிவப்பு ‘ஜெர்ஸி நம்பர், தொப்பி’-யுடன் ஆடும் ஆஸி,.-இங். - பின்னணியில் சோகக் கதை..!
சிவப்பு ‘ஜெர்ஸி நம்பர், தொப்பி’-யுடன் ஆடும் ஆஸி,.-இங். - பின்னணியில் சோகக் கதை..!
Published on

நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியினர் இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பேட்டிங்க் செய்து வரும் இங்கிலாந்து அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜோ டேன்லி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் அணிந்துள்ள ஜெர்ஸியில், அவர்களின் எண்கள் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் சிவப்பு தொப்பி அணிந்துகொண்டு விளையாடி வருகின்றனர். ரூத் ஸ்ட்ராஸ் என்ற அறக்கட்டளை சார்பில் நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுக்காக இரு அணி வீரர்கள் இவ்வாறு சிவப்பு நிறத்தை ஏற்று விளையாடுகின்றனர். 

ஆனால் இதற்கு பின்னால் ஒரு சோகக் கதை இருக்கிறது. ரூ ஸ்ட்ராஸ் அறக்கட்டளை என்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸால் உருவாக்கப்பட்டது. அவரது மனைவி கடந்த 2018ஆம் ஆண்டு நுரையீரல் புற்று நோயால்  இறந்துவிட்டார். அதன்பின்னர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நுரையீரல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com