சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதிற்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எல்லிஸ் பெர்ரி, தன் 16 வயதுக்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கால்பந்து அணி ஆகிய இரண்டு தேசிய அணியிலும் இடம்பிடித்தவர். 2007 ஜனவரியில் நியூ செளத் வேல்ஸ் அணிக்காக அண்டர் -19 இன்டர்ஸ்டேட் தொடரில் விளையாடியவர்.
இப்போது 29 வயதான பெர்ரி, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனை என்ற விருதை தட்டிச் சென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த கவுரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது. சிறந்த இருபது ஓவர் போட்டி வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமனான அல்லிஸா ஹீலி பெற்றுள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி அணியில், இந்திய வீராங்கனைகள், ஸ்மிரிதி மந்தானா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல, டி20 போட்டிக்கான அணியில், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.