இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனையான 105 வயது எய்லீன் வீலன் தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை மணியடித்து அவர் தொடங்கிவைத்தார். கடந்த 1911 ஆம் ஆண்டு பிறந்த எய்லீனுக்கு, இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 105 வயது 266 நாட்கள் வயதுகொண்ட அவர், இங்கிலாந்தின் மூத்த வீராங்கனையாக அறியப்படுகிறார். லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் அமைந்துள்ள மணியை அடித்து போட்டியைத் தொடங்கி வைப்பது மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, முதல்முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடுகிறது. அதேநேரம், இங்கிலாந்து அணி 3 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது.