இலங்கை உடனான முதல் டெஸ்ட்டில் முதல் நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
காலேவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். புஜாராவுடன் இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்த ஷிகர் தவான் 110 பந்துகளில் சதமடித்தார். 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்து தவான் ஆட்டமிழந்தார். தவான்- புஜாரா இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய புஜாராவும் சதமடித்தார். புஜாரா 144 ரன்களுடனும், ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.