“எங்கள் இயல்பை இழந்துவிட்டோம்” : பயோ-பபூளால் பின்விளைவுகளை விவரிக்கிறார் கே.எல்.ராகுல்

“எங்கள் இயல்பை இழந்துவிட்டோம்” : பயோ-பபூளால் பின்விளைவுகளை விவரிக்கிறார் கே.எல்.ராகுல்
“எங்கள் இயல்பை இழந்துவிட்டோம்” : பயோ-பபூளால் பின்விளைவுகளை விவரிக்கிறார் கே.எல்.ராகுல்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல் பயோ-பபூளில் இருப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்து பேசியுள்ளார். வரும் 26-ஆம் தேதியன்று தொடங்க உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் ராகுல். கொரோனா காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ-பபூளில் இருந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது.

இந்த சீசன் முழுவதும் பயோ-பபூளில் தான் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராகுல் அதில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றம் குறித்து சொல்லியுள்ளார். கடைசியாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். பின்னர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார்.

“தொடக்கத்தில் எல்லாம் சரியாக தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் கடைசியாக நான் விளையாடிய இரண்டு தொடர்கள் எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது மிகவும் சவாலான, கடினமான ஒன்றாக இருந்தது. 

பயோ-பபூள் அறிமுகமான ஆரம்ப நாட்களில் எனக்கு நானே இதை கேட்டுக் கொண்டனே. கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் நாம் இப்படி இதில் இருந்து தான் ஆக வேண்டும் என சொல்லிக் கொண்டேன். குறிப்பாக குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்கிறோம். இதனை சக வீரர்களுடன் பேசிய போது தெரிந்துக் கொண்டேன். 

குடும்பமும், நண்பர்களும் தான் நம்மை இயல்பாக உணரச் செய்யும். ஆனால் நாங்கள் தூங்குகிறோம், எழுகிறோம், பயிற்சி செய்கிறோம். இதையே தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வளவு தான். அதனால் நாங்கள் எங்கள் இயல்பை இழந்துள்ளோம் என எண்ணம் வருகிறது” என தெரிவித்துள்ளார் ராகுல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com