109-வருடத்துக்குப் பிறகு... வெஸ்ட் இண்டீஸ் சாதனை

109-வருடத்துக்குப் பிறகு... வெஸ்ட் இண்டீஸ் சாதனை
109-வருடத்துக்குப் பிறகு... வெஸ்ட் இண்டீஸ் சாதனை
Published on

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், 109 வருட வரலாற்றை மாற்றியுள்ளனர்.

ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, 326 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய, வெஸ்ட் இண்டீஸ் அணி 230 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. 8வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ஷேன் ரோரிச்சும், கேப்டன் ஹோல்டரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நேற்று சதம் அடித்து, புதிய வரலாறு படைத்தனர். 8வது வரிசையில் ஆடிய டோவ்ரிச் முதலாவது சதத்தையும், 9வது வரிசையில் ஆடிய ஹோல்டர் 2வது சதத்தையும் நிறைவு செய்து ஆட்டமிழந்தனர். 

ஒரே இன்னிங்சில் 8வது, 9வது வரிசை பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது 109 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு இது போல் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்திருக்கிறது.1908 ஆம் ஆண்டு அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கிலெம் ஹில் (160 ரன்), ரோஜர் ஹார்டிகன் (116 ரன்) ஆகியோர் 8 வது, 9 வது வரிசையில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com