‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி

‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
Published on

அனுபவம் நிறைந்த தோனியுடன் இளம் வீரரான ரிஷப் பந்தை ஒப்பிடுவது நியாயமில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது பிளே ஆஃப் சுற்றுகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த பிளே ஆஃப் போட்டிக்கு அறிமுக அணிகளான குஜராத், லக்னோ அணிகளும், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணியும், இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூரு அணியும் தகுதிபெற்றுள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஐபிஎல் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டநிலையில், அனுபவம் நிறைந்த தோனியுடன் இளம் வீரரான ரிஷப் பந்தை ஒப்பிடுவது நியாயமில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். வாழ்வா, சாவா கட்டத்தில் டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதியபோது, மும்பை அணியின் டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்திலேயே பந்து எட்ஜாகி கேட்ச் ஆனது. ஆனால் கள நடுவர் இதற்கு அவுட் தர மறுத்தார். பந்து பேட்டில் எட்ஜானது நன்கு தெரிந்தது.

ஆனால், ரிஷப் பந்த்  தன்வசம் 2 ரிவ்யூவ் வைத்திருந்தும் எடுக்க மறுத்தார். இது ஏன் என்றே யாருக்கும் புரியாதநிலையில், கடைசியில் டிம் டேவிட் பேட்டிங் தான் திருப்புமுனையாக அமைந்தது. அவர், 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி மும்பை வெற்றிக்கு காரணமாக அமைந்ததுடன், டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை தட்டிப் பறிக்க காரணமாக அமைந்தார். இதனால் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி இருந்தும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஆனால் நல்ல ரன் ரேட் இருந்தும் மும்பையுடனான தோல்வியால் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் சரிந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் விக்கெட்ட கீப்பரும், கேப்டனுமான ரிஷப் பந்த் மீது விமர்சனங்கள் குவிந்தன. இந்நிலையில்தான் சவுரவ் கங்குலி ரிஷப் பந்த் மீதான விமர்சனங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது ‘ரிஷப் பந்த்தை, தோனியுடன் ஒப்பிடாதீர்கள். தோனி மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஐபிஎல், டெஸ்ட், ஒருநாள் என 500-க்கும் மேற்பட்ட போட்டியில் கேப்டனாக தோனி செயல்பட்டுள்ளார். அதனால் தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பீடுவது நியாயமல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இந்த சீசன் அவருடைய வரலாற்றில் மிக மோசமான சீசனாக அமைந்தது. கடைசியாக அவர் விளையாடிய 14 இன்னிங்சில் 19.14 சராசரியுடன், 268 ரன்கள் மட்டுமே எடுத்து 120.17 என்ற சாதாரண ஸ்ட்ரைக்-ரேக்குடன் இந்த சீசனை முடித்துள்ளார். மும்பை அணியின் மோசமான ஆட்டத்தால், இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்தது. இதனால், ரோகித் குறித்தும், இந்த சீசனில் தனது பார்ம் அவுட்டை இழந்து தவித்த முன்னாள் கேப்டன் விராத் கோலி குறித்தும், சவுரவ் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "எல்லோரும் மனிதர்கள் தான். அதனால் தவறுகள் நடக்கும். ஆனால் கேப்டனாக ரோகித்தின் சாதனை சிறப்பானது. ஐந்து ஐபிஎல் பட்டங்கள், ஆசிய கோப்பை என கேப்டனாக அவரது சாதனை மிகச் சிறப்பாகவே உள்ளது. அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்பதால் தவறுகள் நடப்பது இயல்பு" என்று கூறினார். ஆர்சிபியின் இறுதி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அடித்த மேட்ச்-வின்னிங் அரைசதம், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கு மிகவும் தேவையான நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் ரோகித் மற்றும் கோலி குறித்து கங்குலி கூறியதாவது, "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் அதிகமான கிரிக்கெட் போட்டியை விளையாடுவதால் சில சமயங்களில் ஃபார்ம் இல்லாமல் பேட்டிங் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெங்களூரு அணிக்காக தேவைப்படும் நேரத்தில் கடந்த ஆட்டத்தில் கோலி சிறப்பாக விளையாடினார்.

அதனால்தான் கோலி, ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள், அவர்கள் எல்லாம் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள் என நம்புகிறேன்” என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com