சிட்னி டெஸ்ட்: வார்னரை விளையாட வைத்து விஷப்பரீட்சை செய்கிறதா ஆஸ்திரேலியா?

சிட்னி டெஸ்ட்: வார்னரை விளையாட வைத்து விஷப்பரீட்சை செய்கிறதா ஆஸ்திரேலியா?
சிட்னி டெஸ்ட்: வார்னரை விளையாட வைத்து விஷப்பரீட்சை செய்கிறதா ஆஸ்திரேலியா?
Published on

இந்திய கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாத நிலையில் சிட்னி டெஸ்டில் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் 100 சதவிகிதம் ஃபிட்டாக இருக்கிறாரா என்பது தெளிவாக இல்லை என சொல்லியுள்ளார் துணை பயிற்சியாளர் ஆண்டரூ மெக் டொனால்ட். ஆனால் வார்னர் சிட்னி டெஸ்டில் விளையாடுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு போட்டிகளிலும் தடுமாற்றமாக இருந்ததே அந்த அணியின் தொடக்கம்தான். அதனால் ஜோ பேர்ன்ஸ் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சி ஆட்டத்தின்போது புக்கோவ்ஸ்கி காயம்பட்டிருந்தார். அவர் சிட்னி டெஸ்டில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேத்யூ வேட் மிடில் ஆர்டரில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com