இந்நிலையில் கெவின் பீட்டர்சனின் கேள்விகளுக்குக் கோலி, மிக இயல்பாகப் பதிலளித்தார். அவர் ஆடுகளத்தில் சில நேரங்களில் எல்லை மீறுவது குறித்தும் பேசப்பட்டது. அப்போது கோலி, ‘நான் கேப்டனாக இருப்பதால் வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை. அந்த ஃபயர் இல்லாமல் ஒருபோதும் விளையாட முடியாது’ என்று கூறினார்.