"டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு எதிர்காலம் இல்லை" - தினேஷ் கார்த்திக்

"டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு எதிர்காலம் இல்லை" - தினேஷ் கார்த்திக்
"டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு எதிர்காலம் இல்லை" - தினேஷ் கார்த்திக்
Published on

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு எதிர்காலம் இல்லை. அதனால் நான் விளையாடுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது 2 மாதக் காலமாக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார். இம்முறை விளையாடுவதற்காக இல்லாமல் கிரிக்கெட் வர்ணனை செய்துக்கொண்டு இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து சென்றவர் அங்கிருந்தபடி தொலைக்காட்சியில் ஆங்கில வர்ணனை செய்துக்கொண்டு இருக்கிறார். 36 வயதாகும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் விளையாடி வருகிறார்.

முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் ஏன் இப்போது தமிழ்நாடு அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் "நான் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் இப்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும். மேலும் எனக்கு டெஸ்ட் போட்டிகளில் இனி எதிர்காலம் இல்லை என்பதால் விளையாடுவதில்லை" என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com