நெருக்கடியான சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகாத தோனி, அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போடி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்ந்தது. போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வெற்றியின் களிப்பில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள், இந்திய வீரர்களை நக்கலடித்து கோஷமிட்டனர்.
' என்ன கேப்டன் கோலி, உங்க நம்பிக்கை போச்சா... எங்ககிட்ட முடியாது' என்கிற மாதிரி ஆக்ரோஷமாக கத்தினர். மேலும் இந்திய வீரர்களை திட்டியபடியும் கூச்சலிட்டனர். இவர்களின் கேலி பேச்சை கண்டுகொள்ளாமல் கேட்பன் கோலி சென்றுவிட்டார். ஆனால் முகமது ஷமி கோபத்தை அடக்கமுடியாமல் கூச்சலிட்ட ரசிகரை நோக்கி, என்ன? என்பது போல் முன்னேறினார். ஆனால் அந்த நேரம் அங்கு வந்த தோனி, ஷமியை சமாதானப்படுத்தி, முதுகில் தட்டிகொடுத்து அழைத்து சென்றார். இதனால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன்மூலம், எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் கோபத்திற்கு ஆளாகாமல் மீண்டும் ஒருமுறை தனது பெருந்தன்மையை நிரூபித்திருக்கிறார் கூல் தோனி.