பிசிசிஐ அழுத்தத்தாலேயே கேப்டன் பதவியை துறந்தார் தோனி?

பிசிசிஐ அழுத்தத்தாலேயே கேப்டன் பதவியை துறந்தார் தோனி?
பிசிசிஐ அழுத்தத்தாலேயே கேப்டன் பதவியை துறந்தார் தோனி?
Published on

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக பிசிசிஐ நிர்வாகத்தின் வற்புறுத்தலே காரணம் என்று பிகார் கிரிக்கெட் சங்க செயாலாளர் ஆதித்யா வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி கடந்த 4ம் தேதி அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் தோனியின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை செயலாளர் அமிதாப் சவுத்ரியின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தோனி பதவி விலகியதாக ஆதித்யா வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், தோனி பதவி விலகி ஜனவரி 4ம் தேதி ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் அணிகள் மோதிய ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டி நாக்பூரில் நடந்தது. ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகராக நாக்பூர் வந்திருந்த தோனியை தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் சந்தித்துப் பேசினார். பிசிசிஐ இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி அறிவுரையின்படி தோனியைச் சந்தித்த பிரசாத், கிரிக்கெட்டில் தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த அழுத்தம் கரணமாகவே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதாக தெரிகிறது என்று ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விராத் கோலி தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனி இடம்பிடித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் புனேவில் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com