“இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசை” - கங்குலி ஓபன்டாக்

 “இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசை” - கங்குலி ஓபன்டாக்
 “இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசை” - கங்குலி ஓபன்டாக்
Published on

எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசை உண்டு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர்களை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது பயிற்சியாளர் ஆசை குறித்து தெரிவித்துள்ளார். அதில்,“எனக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. எனினும் தற்போது நான் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், ஐபிஎல் ஆலோசகர் மற்றும் வர்ணனையாளர் ஆகிய பணிகளை செய்து வருகிறேன். எனவே தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பில்லை. 

இந்தப் பணிகளிலிருந்து விடுபட்ட பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கண்டிப்பாக விண்ணப்பிப்பேன். ஆகவே வருங்காலத்தில் கண்டிப்பாக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பேன். அத்துடன் இந்த முறை பயிற்சியாளர் பதவிக்கு பெரிய நபர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றே தெரிகிறது. 

மேலும் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழு எவ்வாறு பயிற்சியாளரை தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அத்துடன் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் மிகவும் சவாலானதாக அமையும். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. அத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் தற்போது சிறப்பாக தான் விளையாடி வருகிறது. எனவே இந்தத் தொடர் இந்திய அணிக்கு நல்ல சவாலான தொடராகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com