பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் இரகு பந்து போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர் மற்றும் குழு போட்டி ஆகிய மூன்று பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவியொருவர்.
இதையும் படிங்க... சென்னை அதிர்ச்சி: பைக்கில் சென்றவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்
மதுரை மாநகராட்சி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அணிகாவின் இந்த சாதனையை பாராட்ட, அவரை நேரில் அழைத்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டியதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கி உள்ளார்.
தங்கப்பதக்கம் வென்ற ஜெர்லின் அணிகாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொண்டதால் தவறவிட்ட 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை மாணவி எழுதவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.