கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி.
ஸ்டெம்பிங், கேட்ச் என விக்கெட் கீப்பிங்கில் மாஸ் காட்ட தோனியால் மட்டுமே முடியும்.
இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல சம்பவங்களை செய்துள்ளார் தோனி. சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் இன்றைய டெல்லி VS சென்னை ஆட்டத்திலும் அப்படி ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.
டெல்லி பேட்டிங் இன்னிங்ஸில் பத்தொன்பதாவது ஓவரை சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் எதிர்கொண்டார். 118.5 கிலோ மீட்டர் வேகத்தில் அவுட்சைட் ஆப் ஸ்டம்பில் வீசப்பட்ட அந்த பந்து ஷ்ரேயஸின் பேட்டில் பட்டு எட்ஜாகி ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தோனியின் கைகளுக்கு சென்றது.
நொடி பொழுது கூட யோசிக்காமல் வலது பக்கமாக டைவ் அடித்து பறவை போல காற்றில் சில நொடிகள் பறந்து பந்தை கேட்ச் பிடித்தார் தோனி. அந்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
பியூஷ் சாவ்லா பந்தில் பிருத்வி ஷாவை அற்புதமாக ஸ்டெம்பிங் செய்திருந்தார் தோனி.