நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது மும்பை. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி
ரன் கணக்கை துவங்குவதற்குள் 3 விக்கெட்டை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பிருத்வி ஷா, ஷிகர் தவான் மற்றும் ரஹானே என மூன்று பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். அதனால் பிரஷர் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மீது விழுந்துள்ளது. அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக மூன்று பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரும் பும்ரா பந்துவீச்சில் 12 ரன்னில் நடையைக்கட்டினார். அடுத்தடுத்து விக்கெட் இழந்த நிலையில் பொறுப்பாக விளையாட வேண்டிய ரிஷப் பண்ட் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 41 ரன் எடுப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டை இழந்தது.