காமன்வெல்த் போட்டி - பி.வி. சிந்துவைத் தொடர்ந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

காமன்வெல்த் போட்டி - பி.வி. சிந்துவைத் தொடர்ந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்
காமன்வெல்த் போட்டி - பி.வி. சிந்துவைத் தொடர்ந்து தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்
Published on

காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தநிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்நிலையில் இறுதிநாளான இன்று ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்.

இறுதிப்போட்டியில் மலேசிய வீரர் ஸீ யாங் -யை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் லக்‌ஷயா சென். நடப்பாண்டு காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் தொடரில் வெள்ளி வென்றிருந்தார் லக்‌ஷயா சென். தற்போது ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் லக்‌ஷயா சென்.

அத்துடன் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரகாஷ் படுகோனே, சையது மோடி, பாருபள்ளி காஷ்யப் ஆகியோருக்கு அடுத்து 4-வது வீரராக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் லக்‌ஷயா சென். முன்னதாக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான பி.வி. சிந்து தங்கம் வென்றிருந்தார். மேலும் காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com