துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தது.
பெங்களூரு கேப்டன் விராத் கோலி 52 பந்துகளில் 90 ரன்களை குவித்திருந்தார்.
சென்னை அணியின் பவுலர்கள் கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 74 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது.
டூப்லெஸி மற்றும் வாட்சன் பெங்களுருவின் சுழற் பந்து வீச்சாளர் வாஷிங்க்டன் சுந்தரின் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்ப ராயுடுவும், ஜாதவுக்கு மாற்றாக களம் இறங்கிய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனும் 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தனது முதல் போட்டியில் 33 ரன்களை குவித்து ரன் அவுட்டானார் ஜெகதீசன்.
கேப்டன் தோனி 10 ரன்களில் அவுட்டானார்.
சாம் கர்ரன் டக் அவுட்டானார்.
சென்னை அணிக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த ராயுடு 42 ரன்களில் போல்டானார்.
பிராவோ மற்றும் ஜடேஜா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை சென்னை எடுத்திருந்தது.