துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் கடைசி ஐந்து ஓவர்களில் 74 ரன்களை லீக் செய்தனர் சென்னை பவுலர்கள்.
ஆர்.சி.பி கேப்டன் விராத் கோலி மட்டும் தன் அணிக்காக ஒன் மேன் ஷோ இன்னிங்ஸை ஆடி ஆடியன்ஸின் அப்ளாசை அள்ளியிருந்தார். பதினைந்து ஓவர் முடிவில் 95 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆர்.சி.பி.
அதற்கடுத்த ஐந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை குவித்து சென்னைக்கு சவால் கொடுத்தார் கோலி.
கரன் ஷர்மா 16 வது ஓவரில் வெறும் எட்டு ரன்களை கொடுத்திருந்தார். தாக்கூர் வீசிய 17 வது ஓவரில் 14 ரன்கள். அந்த ஓவரில் நான்கு பந்துகள் ஷார்ட் லெந்தில் வீசப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இரண்டு பவுண்டரிகளை கோலி விளாசினார்.
18 வது ஓவரை வீசிய சாம் கர்ரனின் ஓவரில் மூன்று சிக்ஸர்கள். யார்கர் வீசாமல் குட் லெந்தில் வீசி சாம் உதை வாங்கியிருப்பார்.
மீண்டும் 19வது ஓவரை தாக்கூர் வீச அதில் 14 ரன்கள். அதே போல பிராவோ வீசிய கடைசி ஓவரிலும் பெங்களூரு 14 ரன்கள் குவித்திருக்கும். விக்கெட் வீழ்த்த தவறியது மற்றும் கடைசி ஓவர்களில் சென்னை பவுலர்கள் யார்க்கர் பந்துகளை வீசாததுமே அதிக ரன்களை லீக் செய்ய காரணம். கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் நான்கு டாட் பால்களை மட்டுமே சென்னை வீசியிருக்கும். அதுமட்டுமல்லாது 7 எக்ஸ்டராவும் இதில் அடங்கும்.
பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த போது அந்த அணி 14.3 ஓவரில் 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போதுவரை ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தது. அதனால், 150 ரன்களுக்கு பெங்களூர் அணி கட்டுப்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தை தன்னுடைய அதிரடியால் விராட் கோலி பெங்களூர் அணி பக்கம் திருப்பிவிட்டார். 170 என்ற சவாலான ஸ்கோரை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துவிட்டார்கள். ஆனால், தற்போதைக்கு 170 என்பது சென்னைக்கு சவாலான ஸ்கோர் தான்.