மும்பை இந்தியன்ஸா சிஎஸ்கேவா ? யாரு கெத்து ? என்ன சொல்லுது ரெக்கார்டு !

மும்பை இந்தியன்ஸா சிஎஸ்கேவா ? யாரு கெத்து ? என்ன சொல்லுது ரெக்கார்டு !
மும்பை இந்தியன்ஸா சிஎஸ்கேவா ? யாரு கெத்து ? என்ன சொல்லுது ரெக்கார்டு !
Published on

ஐபிஎல் 2019 போட்டிகள் இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், இறுதிப் போட்டிக்கு முதலில் எந்த அணி போகப் போகிறது என்பதை நாளை நடைபெறவுள்ள தகுதிச் சுற்று ஒன்றில் தெரிந்துவிடும். சேப்பாக்கத்தில் நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஐபிஎல் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றிப் பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் நடக்கும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) சுற்றில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன், இரண்டாவது தகுதி சுற்றில் 10- ஆம் தேதி மோதும். இப்போது புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள்  பிளே-ஆப் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சிஎஸ்கேவுக்கும் பயங்கர போட்டி இருக்கும். இந்த இரு அணிகளுக்கும் ஏராளமான ரசிகர்களும் உண்டு. இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியே அதிக வெற்றியை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. சிஎஸ்கே 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதிலும் இந்தாண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும், சிஎஸ்கே ரசிகர்கள் சோகமாகவும் இருக்கின்றனர்.

ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டியில் மும்பையும் சிஎஸ்கேவும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தனர். ரோகித் சர்மா தலைமையிலான இப்போதைய மும்பை அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கேவும் சமபலம் கொண்டாகவே இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு முதன்முதலாக தோனி தலைமையிலான சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றது.

அப்போது சச்சின் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்த அணியான மும்பை இந்தியன்ஸை, சிஎஸ்கே இறுதியாட்டத்தில் ஊதி தள்ளி கோப்பையை கைப்பற்றியது. எனவே அந்த தெம்புடன் சிஎஸ்கே இப்போது களமிறங்குகிறது. அதுவும் போட்டி சென்னையில் நடப்பதால், "வெற்றி நமதே" என ரசிகர்கள் இப்போதே கூச்சலிட தொடங்கிவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com