ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

#MumbaiIndians have won the toss and they will bowl first against #CSK.

Follow the game here - https://t.co/NQjEDM2zGX #MIvCSK #VIVOIPL pic.twitter.com/4Dhook7aH7
— IndianPremierLeague (@IPL) May 1, 2021

ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ என்றழைக்கப்படும் இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் நடப்பு சீசனில் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. சென்னை அணி 5 வெற்றிகளையும், மும்பை அணி 3 வெற்றியையும் வசப்படுத்தியுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் மும்பை அணி 19 முறையும், சென்னை அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றிப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் முனைப்பில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன. சென்னை அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. மும்பை அணியில் ஜெயந்த் யாதவிற்கு பதிலாக ஜிம்மி நீஷம், நாதன் கவுல்டர் நில்க்கு பதிலாக குல்கர்னி களம் இறங்குகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எல் கிளாசிக்கோ:
கிரிக்கெட் உலகில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டிகள், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஷ் தொடர் இவற்றிற்கு நிகரான எதிர்பார்ப்புகளைக் கொண்ட போட்டி என்றால் ஐபிஎல்லில் சென்னை மும்பை அணிகள் இடையிலான போட்டியே. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல் இன்று வரை இவ்விரு அணிகள் மோதிக் கொள்ளும் போது களத்தில் இருக்கும் அதே அனல், சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கிடையிலும் இருக்கும். லலீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா- ரியல் மேட்ரிட் இடையிலான போட்டி எல்கிளாசிகோ என்றால் ஐபிஎல்லின் எல்கிளாசிகோ சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை தான்.
அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி என்றால், அதிகமுறை இறுதிப்போட்டிக்கு சென்றது சென்னை அணியாக உள்ளது. ஆனால் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதிக முறை வெற்றிக்கனியை பறித்தது மும்பை அணியே. இவ்விரு அணிகளும் இது வரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் மும்பை அணி 19 முறையும், சிஎஸ்கே 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட்டில் அன்றைய தினமே வெற்றி தோல்வியை தீர்மானிக்கு என்பது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பலமுறை உணர முடிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியே அதற்கு சான்று. கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை இவ்விரு அணிகளுக்கிடையே மட்டுமே தவழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 4 சீசன்களில் 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
கடந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்ட முதல் போட்டியில் சென்னை அணி சாம் கரணின் இறுதிநேர அதிரடிகளால் வெற்றி பெற, இரண்டாவது சந்திப்பில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழி தீர்த்தது மும்பை இந்தியன்ஸ். நடப்பு சீசனில் இரு அணிகளும் வெற்றி பாதையில் உள்ளதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ளது. இவ்விரு அணிகளிடையேயான போட்டி என்பது ஃபார்மைப் பொறுத்தது மட்டுமல்ல; போட்டி தின மன நிலையையும் பொறுத்ததே.
மற்ற அணிகளின் ரசிகர்கள் பிளே ஆஃப்க்கான முனைப்பில் இருந்தால், சென்னை மும்பை அணி ரசிகர்களுக்கு கோப்பை வெல்வது மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கும். ஹாட்ரிக் சாம்பியன்ஸ் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு சென்னை அணிக்கு 2012 ஆம் ஆண்டு இருந்ததைப் போல, மும்பை அணிக்கு இந்த வருடம் உள்ளது. ரசிகர்களின் கனவை நனவாக்கும் விதமாக ரோகித்தின் படை ஹாட்ரிக் கோப்பையை வசப்படுத்துமா? கடந்த சீசன் காயங்களுக்கு மருந்தாக கோப்பையை பற்றிச் செல்லுமா தோனியின் படை? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.