தனி ஆளாக நின்று கெத்தாக களமாடிய திரிபாதி... சென்னைக்கு 168 ரன்கள் இலக்கு...!
அபுதாபியில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தார் புதிய ஒப்பனராக களம் இறங்கிய ராகுல் திரிபாதி. 51 பந்துகளில் 81 ரன்களை விளாசினார் அவர். இதில் 3 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.
அதே நேரத்தில் சுப்மன் கில், நித்திஷ் ராணா, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் என கொல்கத்தாவின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
இருப்பினும் அசராமல் ரன் குவித்து ஆட்டத்தை டர்ன் செய்தார் திரிபாதி.
கம்மின்ஸ் தன் பங்கிற்கு 17 ரன்களை குவித்தார்.
சென்னை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா, சாம் கர்ரன் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிராவோ மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து சென்னனை 168 ரன்களை விரட்ட உள்ளது.