நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன்.
ஆடும் லெவனில் ஐந்து ஆட்டங்களில் இடம் பிடித்திருந்தார் அவர்.
சென்னை அணி லீக் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தனது ஐபிஎல் அனுபவங்களை பிபிசிக்கு பகிர்ந்துள்ளார் அவர்…
“டிவியில் நான் பார்த்து வியந்த கிரிக்கெட் வீரர்களோடு ஐபிஎல் வாய்ப்பின் மூலம் என்னால் நெருங்கி பழக முடிந்தது. 2018இல் சென்னை அணியில் இடம் பிடித்திருந்தாலும் இந்த சீசனில் தான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. பிளம்மிங், ஹஸ்ஸி, வாட்சன், டூப்லெஸிஸ், தாஹிர், தோனி என சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும் வீரர்களோடு நேரத்தை செலவிட முடிந்தது நல்ல அனுபவமாக இருந்தது.
பயோ பபுளில் இருந்ததால் எல்லோருடனும் கிரிக்கெட் குறித்து நிறைய பேசினேன்.
எல்லோரும் சொல்வது போல தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு பக்கத்தில் இருந்து அறிந்து கொண்டேன்.
நேர காலம் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் குறித்து அவரிடம் சந்தேகங்களை கேட்கலாம். நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் கீப்பிங் நுணுக்கங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்வேன்.
கிரிக்கெட் குறித்து அவருக்கு இருக்கும் புரிதல் செம மாஸ்” என தெரிவித்துள்ளார்.
நன்றி : பிபிசி