அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் போட்டிக்கு முன்பும், பின்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான மகேந்திர சிங் தோனியுடன் மற்ற அணிகளை சேர்ந்த இளம் வீரர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
அது கடந்த சில போட்டிகளாகவே அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் அந்த அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தோனியை பார்த்ததும் இருகரம் கூப்பி வணங்கி ஆசி பெற்று பேசினார்.
அது போல தொடர்ந்து போட்டிகள் முடிந்ததும் எதிரணி வீரர்கள் என்ற வேற்றுமை பார்க்காமல் தோனியும் வளர்ந்து வரும் இளம் வீரர்களோடு பேசி பழகுகிறார்.
அண்மையில் முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்திற்கு பிறகு அந்த அணியின் இளம் வீரர்கள் கார்க், அப்துல் சமாத், கலீல் அகமது, நதீம், அபிஷேக் ஷர்மா என இளம் வீரர்களோடு கலந்துரையாடினார் தோனி.
அதில் கிரிக்கெட் குறித்த தனது அனுபவத்தையும், ஞானத்தையும் தோனி அவர்களுடன் பகிர்ந்திருக்கலாம்.
கிரிக்கெட்டில் தோனி ஒரு பெரிய யூனிவர்சிட்டி என்பதால் அவரிடம் பாடம் கற்கும் மாணவர்களை போல எல்லோருமே அவர் முன்னே கைகளை கட்டிக்கொண்டு மரியாதையோடு பேசினர்.
இதில் கலீல் அகமது செல்லமாக அணைத்துக் கொண்டார்.