லெக் ஸ்பின்னர்ஸ் வலையில் வீழும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்  - தொடரும் சோகம்!!

லெக் ஸ்பின்னர்ஸ் வலையில் வீழும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்  - தொடரும் சோகம்!!
லெக் ஸ்பின்னர்ஸ் வலையில் வீழும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்   - தொடரும் சோகம்!!
Published on

பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது மாடர்ன் டே கிரிக்கெட். பவர்பிளே, ஃப்ரீ ஹிட், ஒன் பவுன்ஸ் என பேட்ஸ்மேன்களுக்காக ஏகப்பட்ட சலுகைகள். அதிலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சொல்லவே வேண்டாம். உலகின் நெம்பர் ஒன் பவுலரையும் பின்ச் ஹிட்டர்கள் என சொல்லப்படும் பிரதான பேட்ஸ்மேன்களாக இல்லாதவர்கள் கூட பந்தை காட்டடி அடித்து மிரட்டுவார்கள். 

அதனால் வேகப்பந்து வீசுபவர்களையும், துல்லியமாக யார்க்கர் வீசும் பவுலர்களை தான் பெரும்பாலான அணிகள் ஆடும் லெவனில் சேர்க்கின்றன. சம்பிரதாயத்திற்காக ஒன்று அல்லது இரண்டு ஸ்பின்னர்களையும் சேர்ப்பது உண்டு.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பார்முலாவை தான் பின்பற்றி வருகிறது. இந்திய ஆடுகளங்களில் விளையாடி பழக்கப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்தை எதிர்த்து விளையாடுவது பெரிய டாஸ்க்காக இருக்காது. இருப்பினும் அந்த டாஸ்க்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். 

அதில் டூப்லெஸியும், வாட்சனும் கொஞ்சம் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். வாட்சன் கிரீஸில் செட்டாகி விட்டால் ஆட்டம் அனல் பறக்கும். 

இவர்களை தவிர சென்னை அணியில் விளையாடும் மற்ற வலது கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின் என்றாலே அலர்ஜி தான். 

கடந்த 2018 சீசனில் இருந்து பார்த்தால் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ராயுடு ஆறு முறை தனது விக்கெட்டை இழந்துள்ளார். அவருக்கு கம்பெனி கொடுக்கும் விதமாக வாட்சனும் ஆறு முறை அவுட்டாகியுள்ளார்.

அடுத்ததாக தோனி ஐந்து முறையும், டூப்லெஸி மூன்று முறையும் அவுட்டாகி உள்ளனர். அபூர்வ பேட்ஸ்மேனான கேதார் ஜாதவிற்கு OFF ஸ்பின், லெக் ஸ்பின், ஃபாஸ்ட் என்ற பாகுபாடு எல்லாம் கிடையவே கிடையாது. 

அந்த ஒரு காரணத்திற்காகவே எதிரணிகள் சென்னை உடனான ஆட்டத்தில் லெக் ஸ்பின்னர்களை இறக்கி இம்சை கொடுப்பது உண்டு. அப்படி நடப்பு சீசனில் மட்டும் 11 முறை சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். 

ராகுல் சஹார், ஷ்ரேயஸ் கோபால், திவாட்டியா, அப்துல் சமாத், வருண் சக்கரவர்த்தி, சஹால் மாதிரியான வெவ்வேறு அணிகளின் லெக் ஸ்பின்னர்கள் சென்னை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 

தோனி மூன்று முறையும், ராயுடு இரண்டு முறையும் அவுட்டாகி உள்ளனர். 

அதனாலேயே ஒவ்வொரு அணியும் அவசியமாக ஆடும் லெவனில் சென்னைக்கு எதிராக ஸ்பெஷலிஸ்ட் லெக் ஸ்பின்னர்களை ஆடும் லெவனில் சேர்க்கிறது. 

அதோடு சென்னை அணி பவர் பிளேயில் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை என்றாலும் கடந்த சீசன்களில் மிடில் ஓவர்களில் (7-15) சீராக விளையாடி ரன்களை சேர்ப்பது வழக்கம். இந்த சீசனில் லெக் ஸ்பின்னர்களை கொண்டு அதற்கு தடை போட்டு விட்டனர் எதிரணியின் கேப்டன்கள். அதனால் தான் ஸ்லாக் ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி சென்னை பேட்ஸ்மேன்கள் இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்கின்றனர். 

இந்த லெக் ஸ்பின் விஷயத்தில் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனம் செலுத்தினால் வெற்றி பாதைக்கு திரும்பலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com