துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.
இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை சென்னை குவித்துள்ளது. சென்னை அணிக்காக சாம் கர்ரனும், டூப்லெஸியும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
சாம் கர்ரன், வாட்சன் மற்றும் ராயுடு சிறப்பாக விளையாடி தலா முப்பது ரன்களுக்கு மேல் குவித்தனர்.
பின்னர் களம் இறங்கிய தோனி மற்றும் ஜடேஜா அவர்களது இயல்பான ஆட்டத்தை விளையாடினர்.
மொத்தமாக இருபது ஓவர்களில் 47 பந்துகளை டாட் பாலாக ஆடியுள்ளனர் சென்னை வீரர்கள். 38 பந்துகளை சந்தித்த வாட்சன் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், அம்பத்தி ராயுடுவும் நிறைய டாட் பந்துகள் ஆடினார். 34 பந்துகளில் 41 ரன்கள் மட்டும் எடுத்தார். இவர்கள் இருவரும் மிடில் ஓவர்களில் மிகவும் நிதானமாக விளையாடினர்.
சிஎஸ்கே வீரர்களின் நிதானமான ஆட்டமும், டாட் பந்துகள் ஆடும் விதமும் இன்றைய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். ஏனெனில் ஹிட் ஷாட்கள் இன்னும் அடித்திருந்தால் 180 ரன்களுக்கு மேல் குவித்திருக்கலாம்.