கோல்களை தடுத்த கில்லி ! யார் அவர் ?

கோல்களை தடுத்த கில்லி ! யார் அவர் ?
கோல்களை தடுத்த கில்லி ! யார் அவர் ?
Published on

உலக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றைய நாக் அவுட் சுற்றுப் போட்டியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் மோதின. இதில் குரோஷியா அணி பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தச் சுற்றில் 16 அணிகள் மோதுகின்றன.

இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரஷ்ய அணி காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக, இரவு 11.30 மணிக்கு நிஸ்னி நவ்கோராட் ஸ்டேடியத்தில் தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணி டென்மார்க்குடன் மோதியது.

மிகவும் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில் முதல் நிமிடத்திலே டென்மார்க் அணியின்  மேத்யஸ் ஜோர்ஜென்சன் முதல் கோலை அடித்தார். அதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 4 நிமிடத்தில் குரோஷியா வீரர் மேரியோ 1 கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு முழு நேர ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணியினராலும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்திலும் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையே பின்பற்றப்பட்டது.

ஷூட் அவுட்டில் டென்மார்க் அடித்த முதல் கிக்கை குரோஷியா கோல் கீப்பர் சுபாஸிக் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் ஷிமேக்கல் தடுத்தார். இதனால் ஷூட் அவுட் சூடுபிடித்தது. தொடர்ந்து, இரண்டாவது கிக்கை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது.

குரோஷியா இரண்டாவது கிக்கை கோலாக மாற்றியதால் 1-1 என ஆனது. பின்பு மூன்றாவது வாய்ப்பை இரு அணிகளும் கோலாக மாற்றியதால் 2-2 என சமநிலை அடைந்தது. ஆனால் அதற்கடுத்த டென்மார்க்கின் 4 ஆவது வாய்ப்பை குரோஷியா கோல் கீப்பர் சுபாஸிக் தடுத்தார், ஆனால் குரோஷியாவின் 4 ஆவது வாய்ப்பை டென்மார்க் கோல் கீப்பர் தடுத்தார். கடைசி வாய்ப்பு அதாவது 5 ஆவது கிக்கின் போது இரு அணியும் 2-2 என்ற நிலையே இருந்தது.

ஆனால் டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் சுபாஸிக் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது.

இந்தப் போட்டியில் அபாரமாக செயல்பட்டு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் மூன்று கோல்களை தடுத்த குரோஷியா கோல் கீப்பர் டானிஜல் சுபாஸிக்கை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பெனால்ட்டி ஷூட் அவுட்டில் கோல்களை தடுப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதனை செய்துக் காட்டியுள்ளார் சுபாஸிக்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com