கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ரூ.1,698 கோடி வழங்க முன்வந்துள்ளது சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாசர் கிளப்.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப். ஆனால், நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ ஆடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ரொனால்டோ அடுத்ததாக எந்த கால்பந்து அணியில் இணைந்து விளையாட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாசர் கிளப், ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய 173 மில்லியன் பவுண்ட்கள் வழங்க முன்வந்துள்ளது அல் நாசர் கிளப். அதாவது ஒரு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,698 கோடி வழங்க முன்வந்துள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் இதற்கு ரொனால்டோ சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவற விடாதீர்: கத்தார் கால்பந்து திருவிழா: அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்ற அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள்