‘ஆஸின்னா அய்யா கில்லிடா’ மீண்டும் நிரூபித்த யுவராஜ்! லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா அசத்தல்

லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணியின் கேப்டன் யுவராஜ் 59 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்..
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்pt web
Published on

லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவில்லை என்பது சினிமா வசனம். அதற்கு உதாரணமாக இருக்கிறார் யுவராஜ் சிங். லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் என 6 அணிகள் பங்கேற்றன.

குரூப் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் 5ல் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 5 போட்டியில் விளையாடின் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.

புள்ளிப்பட்டியல் மற்றும் ரன்ரேட் அடிப்படையில், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் என நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

யுவராஜ் சிங்
காவிரியில் தமிழகத்திற்கான உரிமை நீர் எத்தனை டிஎம்சி? தற்போதைய இருப்பு என்ன? கர்நாடகா கொடுத்தது என்ன?

இந்திய அணி குவித்த இமாலய இலக்கு

இதில், முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நிலையில், பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் அடித்து நொறுக்கினார். உத்தப்பா 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 65 ரன்களைக் குவித்தார். கேப்டன் யுவராஜ் சிங் 28 பந்துகளில் 59 ரன்களையும், யூசுப் பதான் 23 பந்துகளில் 51 ரன்களையும், இர்ஃபான் பதான் 19 பந்துகளில் 50 ரன்களையும் எடுத்தனர்.

யுவராஜ் சிங்
’ரோகித்திடம் இருந்து அதை எதிர்பார்க்கல!’ - 29 ரன்கள் விளாசப்பட்ட ஓவர் குறித்து ஸ்டார்க் ஓபன் டாக்!

ஆஸின்னா அண்ணன் கில்லி-டா

255 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியோ, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் தவால் குல்கர்னி 2 விக்கெட்களையும், பவான் நெகி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் சாம்பியன்ஸை எதிர்கொள்ள இருக்கிறது.

இதுஒருபுறம் இருந்தாலும் ரசிகர்கள் கேப்டன் யுவராஜ் சிங்கை கொண்டாடி வருகின்றனர். நாக் அவுட் போட்டிகள் அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு என்றால் யுவராஜ் சிங் சிறகடிப்பார் என்கிற ரீதியில் பதிவுகள் இருக்கின்றன.

உதாரணமாக, 2000 ஆம் ஆண்டில் நடந்த ஐசிசி நாக் அவுட் (தற்போது சாம்பியன்ஸ் டிராபி) முதல் குவாலிஃபயர் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் யுவராஜ் சிங் 84(80) ரன்களைக் குவித்திருந்தார். இந்திய அணியின் மற்ற பேட்டர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில், யுவராஜின் அந்த ஆட்டம் அணிக்கு தேவையானதாய் இருந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யுவராஜ் சிங்
"இந்த 2 இந்திய வீரர்களால் என்னுடைய 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும்!" - பிரையன் லாரா

நாக் அவுட் போட்டிகளின் நாயகன்

2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில், 30 பந்துகளை மட்டுமே ஆடி 70 ரன்களைக் குவித்திருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த இரு போட்டிகளிலும் யுவராஜ் சிங்கே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், இரண்டாவது காலிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 260 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், யுவராஜ் சிங்கும் ரெய்னாவும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்கள். யுவராஜ் சிங் நாட் அவுட்டாக 57 ரன்களை அடித்திருப்பார்.

இத்தகைய சூழலில் தற்போதும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் அதிரடியாக ஆடி 59 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதினையும் வென்றுள்ளார்.

யுவராஜ் சிங்
வரலாற்றில் ஒரே 'Fast Bowler'! 704 விக்கெட்டுகளுடன் விடைபெற்ற ஆண்டர்சன்.. புது வரலாறு படைத்த Stokes!

இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com