அஸ்வினுக்கு பதிலாக அவர்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்! - யுவராஜ் சிங் கூறும் காரணம்?

இந்தியாவின் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அஸ்வின் இடத்தில் மாற்றுவீரருக்குதான் வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
Yuvraj Singh - R Ashwin
Yuvraj Singh - R AshwinTwitter
Published on

2011 மற்றும் 2015 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது மூன்றாவது முறையாக 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலாக அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை, அது குறித்து அவரும் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. “நம்ம பசங்க கப்ப அடிச்சிட்டு வரனும், ஃபேன் பாய் சண்டலாம் போடாம எல்லாரும் நம்ம இந்திய அணிக்கு சப்போர்ட் பண்ணணும்” என்று தன்னுடைய யூ-டியூப் சேனலில் கூட வீடியோவில் பேசியிருந்தார்.

Ashwin
AshwinTwitter

உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த அக்சர் பட்டேல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கான இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு பிறகு, அவருக்கான உலகக்கோப்பை இடத்தை அஸ்வின் சீல் செய்தார். அக்சர் பட்டேலுக்கு பிறகு வாசிங்டன் சுந்தர் மாற்று வீரராக பார்க்கப்பட்டாலும், அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் அனுபவமும், 155 ODI விக்கெட்டுகளும், கடைசி நேரத்தில் களமிறங்கி ஹிட்டிங் செய்யக்கூடிய எபிலிடியும் அவரை தேர்வில் முன்னுக்கு தள்ளியுள்ளது.

அஸ்வினுக்கு பதில் அவர்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்! - யுவராஜ் சிங்

அக்சர் பட்டேலுக்கான மாற்று வீரர் தேர்வு குறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங், “அக்ஸர் பட்டேல் அணியில் இல்லாததால், 7வது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அக்சருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தால், இந்தியாவுக்கு இன்னொரு இடது கை வீரர் இருந்திருப்பார்.

Yuvraj Singh - R Ashwin
Yuvraj Singh - R Ashwin

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தேர்வு செய்யப்படவில்லை, அதே போல் யுஸ்வேந்திர சாஹலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மற்றபடி இந்திய அணி ஒரு கலவையாக நன்றாக இருப்பதாக உணர்கிறேன்” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடன் யுவராஜ் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com