14 இடங்கள் முன்னேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்... ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் புதிய உச்சம்!

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்களை விரட்டிய பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி புதிய உச்சத்தை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்Twitter
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பதிவுசெய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். போட்டியில் 236 பந்துகளில் 14 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 214 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தியாவை 556 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

ஒரே டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள், ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச (22) சிக்சர்கள், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக (12) சிக்சர்கள் மற்றும் முதல் மூன்று டெஸ்ட் சதங்களையும் 150+ ரன்களுக்கு மேல் கன்வெர்ட் செய்த முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Jaiswal
Jaiswal

இந்நிலையில் அவரின் அபாரமான பேட்டிங்கிற்கு பிறகு ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால்
’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

14 இடங்கள் முன்னேறி டாப் 15-க்குள் நுழைந்த யஷஸ்வி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியின் முடிவுக்கு பிறகு தற்போது, ஐசிசி தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் 3வது போட்டிக்கு முன் டெஸ்ட் ரேங்கிங்கில் 29 வது இடத்திலிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3வது போட்டியில் இரட்டை சதம் விளாசியதை தொடர்ந்து 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் 699 ரேட்டிங் புள்ளிகளுடன் தன்னுடைய உச்சபட்ச இடத்தை யஷஸ்வி பெற்றுள்ளார்.

jaiswal
jaiswal

இந்திய வீரர்களில் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 12வது இடத்தையும், இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட் அசத்தலான சதத்திற்கு பிற்கு 25வது இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறியுள்ளார். அதே போல சரியாக விளையாடாத ஜோ ரூட் இரண்டாவது இடத்திலிருந்து 2 இடங்கள் பின்தங்கியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் 15வது இடத்திலிருந்து பின்தங்கி 17வது இடத்திற்கு சென்றுள்ளார்.

bumrah
bumrah

இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக டெஸ்ட்டில் கோலி 7வது இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் 2வது இடத்திலும், டி20-ல் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும் நீடிக்கின்றனர். பும்ரா நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் தொடர்ந்து வருகின்றனர்.

ஜெய்ஸ்வால்
7 டெஸ்ட்டில் ”2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரைசதம்”! சேவாக்கின் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com