’லாகூரில் நடந்தது நினைவில்லையா?’ விமர்சனத்தை எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.. வலுக்கும் கண்டனங்கள்!

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியின்போது ரசிகர்கள் மத்தியில் ஒலித்த ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்கோப்புப் படம்
Published on

உலகக்கோப்பை: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா - பாகிஸ்தான் போட்டி

10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை பலவித விமர்சனங்களும் எழுந்தபடி இருந்தன.

இந்தியா - பாகிஸ்தான்
அசைக்க முடியாத வரலாறு..பாகிஸ்தானை 8வது முறையும் சாய்த்த இந்திய அணி-ஒரே போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்!

தொடர் விமர்சனங்களில் சிக்கிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி

ஏற்கெனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு மாட்டிறைச்சி உணவு அனுமதிக்கப்படாதது, அந்நாட்டு ரசிகர்களுக்கு விசா வழங்கப்படாதது என தொடர்ந்து சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தன. அடுத்து மேக்மைட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரமும் சர்ச்சையாகி இருந்தது. இப்படி தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது சிறப்பாகக் கலைநிகழ்சிகளுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது.

மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம்

இந்த நிலையில் போட்டியன்று, மைதான DJ ஜெய்ஶ்ரீ ராம் பாட்டு போட்டது முதல் அந்நாட்டு வீரர்களை நோக்கி அதே வாசகத்தை (ஜெய்ஶ்ரீ ராம்) ரசிகர்கள் கோஷமிட்டது வரை தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் இயக்குநர் மிக்கி ஆர்த்தர்  பேட்டி

போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்த்தர், "இது ஒரு ஐசிசி போட்டி போலவே இல்லை. ஏதோ ஒரு பிசிசிஐ நிகழ்ச்சி போல இருந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷத்தை மைக்கில் கேட்க முடியவில்லையே!

இதை நான் தோல்வியின் காரணமாகக் கூறவில்லை. ஆனால் இதுவும் ஆட்டத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது" என்று நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான்
அரங்கெங்கும் ஒலித்த ஜெய் ஶ்ரீ ராம் கோஷம்; அஹமதாபாத் ரசிகர்கள் செய்தது அநாகரிகத்தின் உச்சம்!

லட்சுண் சிவராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் துணைத் தலைவருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ’ஒரு 16 வயது இளைஞனாக எவ்வளவு துன்புறத்துப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். என்னுடைய மதம் , நிறம், நாடு, கலாசாரம் எல்லாவற்றுக்காகவும் இகழப்பட்டிருக்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் தந்த பதில்!

இதை டேக் செய்திருந்த மூத்த பத்திரிகையாளர் சர்தேசாய் ராஜ்தீப், ’விளையாட்டு என்பது நமக்குள் இருக்கும் நல்லவற்றை வெளிக்கொண்டுவர வேண்டும். தீயவற்றை அல்ல.

பாகிஸ்தான் ரசிகர்கள் நம்முடைய வீரர்களை இகழ்ந்திருக்கலாம். அதேசமயம், புகழவும் செய்திருக்கிறார்கள். 2004ஆம் ஆண்டு லாகூரில் நடந்த போட்டியில் ஒட்டுமொத்த மைதானமும் பாசத்துடன் உங்கள் தமிழ்நாட்டின் பாலாஜியின் பெயரை உச்சரித்தது (நான் மைதானத்தில் இருந்தேன்). சென்னையில் பாகிஸ்தான் வென்றபோது, ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் எழுந்துநின்று கைதட்டினார்கள். அரசியலும், மதமும், சமூக வலைதளங்களும் வெறுப்பை விதைக்கும்போது, விளையாட்டாவது நல்லிணக்கத்திற்கான இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் ஆதாரங்களை அழித்துவிடுவார்” - ஜாமீன் மனு விசாரணையில் காரசார வாதம்

இயக்குநர் அமீரின் கருத்து

இதுகுறித்து திரைப்பட இயக்குநர் அமீரும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர், ’விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும். ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அது ஒரு கிரிக்கெட் வாரியம். அதேபோல பாகிஸ்தான் டீமும் பாகிஸ்தான் அரசால் உருவாக்கப்பட்டது இல்லை. அதுவும் பாகிஸ்தான் வாரியத்துடையது. அந்தந்த நாட்டை சேர்ந்தவர்கள் விளையாடுவதால் பொதுவாக நாட்டின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்கள். எந்தவொரு நாடும் அந்த வீரர்களை உருவாக்கவில்லை.

Director amir
Director amirpt desk

’பி.சி.சி.ஐ அமைப்பில் அரசியல் இருக்கலாம்’!

தனியார் நிறுவனங்களே அந்த அணிகளை உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க வர்த்தகம் தான். அப்படியொரு வர்த்தகத்தில் சென்று உங்கள் தேசப்பற்றைக் காட்டுவீர்கள் என்றால் உங்கள் அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றே சொல்ல வேண்டும். பி.சி.சி.ஐ அமைப்பில் அரசியல் இருக்கலாம். ஆனாலும், அது அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. இவ்வளவு பெரிய வர்த்தகம் சார்ந்த ஒன்று என்பதால் அரசு அதில் தலையிட்டுள்ளது அவ்வளவுதான். ஆனால், அது அரசு உருவாக்கியது இல்லை. அவை முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து இயங்குபவை மட்டுமே. இதையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டு உணர வேண்டும். அங்குச் சென்று தான் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்PT

திமுக எம்.பி. தயாநிதி மாறன், “இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுபூர்வமாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: லியோ திரைப்பட சர்ச்சை: ரசிகர்கள் காட்சிக்காக அதிகாலை 4 மணிக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com