BGT தொடரில் ஷமி.. உடல் நலம் எப்படி? அவர் சொல்வதென்ன?

ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் ஷமி இடம்பெறுவது மிக முக்கியமானது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
முகமது ஷமி
முகமது ஷமிpt web
Published on

மீண்டும் பயிற்சி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசியாக 2023-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடினார். இதன்பின்னர், முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட அவர், அறுவை சிகிச்சை செய்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். நியூசிலாந்து உடனான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் ஷமி பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டார்.

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. கிட்டத்தட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஸிஸ் டெஸ்ட் தொடருக்கு இணையாக பார்க்கப்படும் இந்தத் தொடரை வெல்வதை இரு அணிகளும் மிக முக்கியமானதாக பார்க்கின்றன. அதுமட்டுமின்றி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த வெற்றிகள் மிக முக்கியமானதும் கூட. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் இந்திய அணி தனது ஏ கிளாஸ் ஆட்டத்தை ஆடியாக வேண்டும்.

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தாலும், அடுத்தடுத்த வெற்றிகள் என்பது மிகவும் முக்கியமானது. எனவே, இந்தத் தொடரில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி விளையாட வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

முகமது ஷமி
“சட்டப்படி குற்றம்.. கண்டிக்கக்கூடிய விஷயம்” இர்ஃபான் விவகாரத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பயிற்சியிலேயே அதிக நேரம் செலவிட வேண்டும்

இந்நிலையில் காயம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு எந்த புதிய காயமும் ஏற்படவில்லை. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். அணி மற்றும் திறமையின் மீது நம்பிக்கை வைப்பது முக்கியம். குறைந்தபட்சம் ஒரு உள்நாட்டுப் போட்டியிலாவது விளையாடி ஆஸ்திரேலிய தொடருக்கு முழு உடற்தகுதியுடன் இருப்பேன் என நம்புகிறேன். அதுதான் என் மனநிலை” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா உடனான தொடருக்கு நான் செல்வேனா மாட்டேனா என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அந்தத் தொடருக்கு இன்னும் நாள் இருக்கிறது.

என்னை எப்படி ஃபிட்டாக வைத்துக் கொள்வது மற்றும் சுற்றுப்பயணத்திற்கு என்னால் முடிந்தவரை எப்படி வலுவாக இருப்பது என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். அந்த டெஸ்ட் தொடருக்கு நாம் எந்த மாதிரியான விளையாட்டை ஆட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே அத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும், தொடருக்கு முன், களத்தில் பயிற்சியில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

முகமது ஷமி
கர்வா சௌத்: விரதம் முடிந்தபின் விபரீத முடிவெடுத்த இரு பெண்கள்; அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவங்கள்!

உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் 

முழு உடற் தகுதியுடன் இருந்தால், 8 முதல் 10 நாட்களுக்கு இடைவெளி கிடைத்தால், ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் ஓரிரு உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவது நல்லது. ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் மைதானத்தில் எவ்வளவு நேரம் செலவளிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவிட விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில், சுழல் பந்துவீச்சால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், முகமது ஷமியும் தனது பங்களிப்பினை சிறப்பாகக் கொடுத்திருந்தார். ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் ஷமி இடம்பெறுவது மிக முக்கியமானது என ரசிகர்கள் கருதுகின்றனர்.

முகமது ஷமி
வெம்பக்கோட்டை: 3ம் கட்ட அகழாய்வில் மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com