மைதானத்தில் எழுந்த வாக்குவாதம்.. சண்டையிட்டு வெளியேறிய அல்சாரி ஜோசப்! 10 வீரர்களுடன் விளையாடிய WI!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் விக்கெட் மெய்டன் ஓவருக்கு பிறகு கோவத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அல்சாரி ஜோசப்
அல்சாரி ஜோசப்web
Published on

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதலில் தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன்செய்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியானது கென்சிங்டன் ஓவலில் இன்று தொடங்கி நடைபெற்றது.

அல்சாரி ஜோசப்
IPL 2025|ஜோஸ் பட்லர் முதல் ஃபிலிப் சால்ட் வரை.. மிகப்பெரிய தொகைக்கு போகவிருக்கும் 5 தொடக்க வீரர்கள்!

2-1 என தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்..

3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் தலைமையிலான இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் மற்றும் மௌஸ்லி இருவரும் அரைசதமடித்தனர். மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்காத நிலையில், இறுதியாக வந்த பவுலர்கள் முடிந்தவரை சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர். அதிரடியாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 17 பந்தில் 38 ரன்கள் எடுத்து அசத்த, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து அணி.

salt
salt

264 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பிராண்டன் கிங் (102) மற்றும் கீசி கர்டி (128*) இருவரின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

பிராண்டன் கிங் (102) மற்றும் கீசி கர்டி (128*)
பிராண்டன் கிங் (102) மற்றும் கீசி கர்டி (128*)

இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

அல்சாரி ஜோசப்
IPL 2025: மெகா ஏலத்தில் Bidding War நிகழ்த்தவிருக்கும் 5 IND வீரர்கள்.. ஒவ்வொருத்தரும் Worthuu சார்!

மைதானத்தை விட்டு வெளியேறிய அல்சாரி ஜோசப்..

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது, விக்கெட் மெய்டன் ஓவர் வீசியபோதும் கேப்டனுடன் சண்டையிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தான்கூறியபடி ஃபீல்டிங்கை நிறுத்தாததால் கோவமடைந்த அல்சாரி ஜோசப், 148கிமீ வேகத்தில் பந்தை எறிந்துவிட்டு காரசார விவாதத்திற்கு பின் வெளியேறினார். அவர் சென்ற பிறகு 10 வீரர்கள் மட்டுமே களத்தில் ஃபீல்டிங் செய்தனர்.

என்ன நடந்தது?

இன்னிங்ஸின் 4வது ஓவரை அல்சாரி ஜோசப் வீசினார். அந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் வில் ஜாக்ஸ் அவுட்டான நிலையில் புதிய வீரராக ஜோர்டன் காக்ஸ் களத்தில் பேட்டிங் செய்தார். புதிய வீரர் என்பதால் அவருக்காக இரண்டு எக்ஸ்ட்ரா ஸ்லிப் ஃபீல்டர்களை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் நிலைநிறுத்தினார். இதை எதிர்ப்பார்க்காத அல்சாரி ஜோசப் ஃபீல்ட் செட்டை மாற்றுமாறு கோரிக்கை வைத்தார், ஆனால் அல்சாரியின் கோரிக்கையை ஷாய் ஹோப் நிராகரிக்க அல்சாரி தொடர்ந்து பந்துவீசினார்.

ஃபீல் செட் மாற்றத்தில் மகிழ்ச்சியடையாத அல்சாரி ஜோசப் கோவத்தில் 148.2 கிமீ வேகத்தில் பவுன்சரை வீசி ஜோர்டன் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசிய அல்சாரி ஜோசப், தன்னுடைய கேப்டனின் அணுகுமுறையால் காரசார விவாதம் நடத்திவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிவிட்டு ஒரு ஓவர் வரை கிரவுண்டுக்குள் வராத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களோடு மட்டுமே ஃபீல்டிங் செய்தது.

பின்னர் கிரவுண்டுக்குள் வந்த அல்சாரி ஜோசப் அணியுடன் ஃபீல்டிங்கில் பங்கேற்றார். கிரிக்கெட் வரலாற்றில் இப்படியான நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் வைரலாகி வரும் நிலையில், பந்துவீச்சாளரின் கோரிக்கையை கேப்டன் ஏற்கவேண்டும் என்றாலும், கேப்டனின் வியூகத்தையும் பவுலர் மதிக்க வேண்டும் என பல நெட்டிசன்கள் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

அல்சாரி ஜோசப்
IPL 2025: மெகா ஏலத்தை கலக்கவிருக்கும் MI... வெளியேற்றிய 3 Uncapped இந்திய வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com