ஐசிசி சேர்மனாகும் ஜெய் ஷா? அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

ஐசிசி சேர்மனாக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டால், பிசிசிஐ செயலாளராக ரோஹன் ஜெட்லி தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹன் ஜெட்லி, ஜெய் ஷா
ரோஹன் ஜெட்லி, ஜெய் ஷாஎக்ஸ் தளம்
Published on

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்றுமுறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய் ஷா
ஜெய் ஷாட்விட்டர்

ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே (ஆகஸ்ட் 27) கடைசி நாள் ஆகும். ஆகையால், அவர் இந்தப் பதவிக்கு போட்டியிடுகிறாரா என்பது இன்று தெரிந்துவிடும். ஒருவேளை, ஜெய் ஷா, இந்தப் பதவிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டால், அவர் வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வெளிநாட்டில் குறைவு.. வாரிவழங்கிய இந்திய வங்கிகள்.. ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் அதானியின் கடன்கள்!

ரோஹன் ஜெட்லி, ஜெய் ஷா
ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா? ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்!

அந்த வகையில், ஜெய் ஷா ஐசிசி சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த பிசிசிஐ செயலாளராக யார் தேர்வு செய்யப்படுவார் என தற்போதே பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

ரோஹன் ஜெட்லி
ரோஹன் ஜெட்லி

தற்போது, அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். ஆனால், பிசிசிஐ செயலாளர் பதவியை அவர் ஏற்கப்போவதில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோகன், தொடர்களை பிரபலமாக்குவதில்தான் கவனம் செலுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: Ex Dean-க்கு கடிதம் எழுதியிருந்த மம்தா? பாஜக குற்றச்சாட்டு.. CBI விசாரணை!

ரோஹன் ஜெட்லி, ஜெய் ஷா
உள்நாட்டு போட்டிகள்: கோலிக்கும் ரோகித்துக்கும் அழுத்தம் கொடுத்த கம்பீர்.. ஜெய் ஷா கொடுத்த நச் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com