வாவ்வ்! 124மீ தூரம் பறந்த சிக்சர்; மிரட்டிய 21வயது WI வீரர்! டி20 கிரிக்கெட்டின் Biggest Six? #Video

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் 21 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் டி20 கிரிக்கெட்டில் 124 மீட்டர் சிக்சரை பறக்கவிட்டு எல்லோரையும் மிரட்சியில் ஆழ்த்தியுள்ளார்.
124 மீட்டர் சிக்சர்
124 மீட்டர் சிக்சர்pt
Published on

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிரின்பாகோவின் ஷேக்கரே பாரிஸ், கரீபியன் பிரீமியர் லீக்கின் மிகப்பெரிய சிக்சரை பதிவுசெய்து மிரட்டினார். 21 வயதான ஷேக்கரே பாரிஸ் வெஸ்ட் இண்டீஸ் யு-19 அணி வீரராவார்.

இரண்டாவது இன்னிங்ஸின் 3வது ஓவரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியை ஒரு மறக்கமுடியாத இரவுக்கு ஷேக்கரே பாரிஸ் அழைத்துச்சென்றார். அவர் வீசிய குட்லெந்த் பந்தை முட்டிப்போட்டி லாங்-ஆன் திசைமீது பறக்கவிட்ட பாரிஸ், காற்றை கிழித்துக்கொண்டு மைதானத்தின் கூரையை தாக்குமாறு பந்தை அனுப்பிவைத்தார். பந்தானது காற்றில் நீண்டநேரம் மட்டுமில்லாமல் நீண்டதூரமும் பறந்தது. 124 மீட்டர் தூரம் பயணித்த சிக்சானது, டி20 கிரிக்கெட்டில் மறக்கமுடியாத ஒரு சிக்சராக பதிவுசெய்யப்பட்டது.

பாரிஸை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் டிம் டேவிட்டின் அதிரடியான ஆட்டத்தால் டிரின்பாகோ அணி வெற்றிபெற்றது.

124 மீட்டர் சிக்சர்
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய சிக்சர்..

ஷேக்கரே பாரிஸ் அடித்த 124 மீட்டர் சிக்சானது டி20 கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சிக்சர்களில் ஒன்றாக பதிவுசெய்யப்பட்டது.

பாரிஸ் அடித்த 124 மீட்டர் சிக்சரானது, ஐபிஎல்லில் சிஎஸ்கே வீரர் ஆல்பி மோர்கல் அடித்த 124 மீட்டர் சிக்சருடன் இணைந்தது. அதேநேரத்தில் டி20 வடிவத்தில் மிகப்பெரிய சிக்சராக மார்டின் கப்டில் அடித்த 127 மீட்டர் சிக்சரே இருந்துவருகிறது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் வடிவத்தையும் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி அடித்த 153 மீட்டர் சிக்சரே முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் பிரிட்லீ அடித்த 143மீட்டர் சிக்சர் நீடிக்கிறது.

கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்சர்கள்:

1. ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) - 153 மீ vs தென் ஆப்பிரிக்கா

2. பிரட் லீ (ஆஸ்திரேலியா) - 143 மீ vs இங்கிலாந்து

3. மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) - 127 மீ vs தென் ஆப்பிரிக்கா

4. ஷேக்கரே பாரிஸ் (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) - 124 மீ vs கயானா அமேசான் வாரியர்ஸ்

4. ஆல்பி மோர்கல் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 124 மீ vs டெல்லி கேபிடல்ஸ்

4. பிரவீன் குமார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 124 மீ vs ராஜஸ்தான் ராயல்ஸ்

5. லியாம் லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து) - 122 மீ vs பாகிஸ்தான்

124 மீட்டர் சிக்சர்
இரண்டு WTC பைனலில் தோல்வி.. இந்தியா கோப்பை வெல்ல இந்த 3 வீரர்கள் கம்பேக் கொடுப்பது அவசியம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com