7 விக்கெட்டுகள்.. 4 வீரர்கள் மட்டுமே செய்த பிரத்யேக சாதனை படைத்த வாஷிங்டன்! 259-க்கு சுருண்ட NZ!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 259 ரன்னுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்cricinfo
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று புனேவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

rachin
rachin

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று 1-1 என சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

வாஷிங்டன் சுந்தர்
531 டெஸ்ட் விக்கெட்டுகள்.. 2 சாதனை பட்டியல்களில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

3 விக்கெட்டை வீழ்த்தி தொடக்கத்தை கொடுத்த அஸ்வின்..

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி சிறப்பாகவே தொடங்கியது.

devon conway
devon conway

ஆனால் உடனடியாக ஸ்பின்னர்களுக்கு சென்ற கேப்டன் ரோகித் சர்மா அஸ்வினின் கையில் பந்தை கொடுத்தார். வந்ததுமே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை வெளியேற்றிய அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். உடன் வில் யங்கின் விக்கெட்டையும் கைப்பற்றிய அஸ்வின் நல்ல அடித்தளத்தை அமைத்தார்.

அஸ்வின்
அஸ்வின்

ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து அசத்தினார். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வலுவாக சென்ற இந்த ஜோடியை கான்வேவை 76 ரன்னில் வெளியேற்றி அஸ்வின் பிரித்துவைத்தார்.

வாஷிங்டன் சுந்தர்
344 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே! 15 சிக்சர்கள் விளாசிய சிக்கந்தர் ராசா!

7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வாஷிங்டன்..

அதற்குபிறகு பந்துவீச வந்த வாசிங்டன் சுந்தர் ரஞ்சிக்கோப்பையிலிருந்து தன்னுடைய அசத்தலான ஃபார்மை அப்படியே எடுத்துவந்தார். 105 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நின்று விளையாடிய ரச்சின் ரவீந்திராவை ஒரு ட்ரீம் டெலிவரி மூலம் சாய்த்த செய்த வாஷிங்டன் அவரின் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார்.

தொடர்ந்து வந்த டாம் பிளண்டல், சாண்ட்னர், சவுத்தீ, அஜாஷ் பட்டேல் என மொத்தம் 5 வீரர்களின் ஸ்டம்புகளையும் பறக்கவிட்ட வாஷிங்டன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 5 விக்கெட்டுகளை எடுத்துவந்து மிரட்டினார்.

59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வாஷிங்டன் கைப்பற்ற, 259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி சுருண்டது. இது வாஷிங்டனின் சிறந்த பந்துவீச்சாக பதிவுசெய்யப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்காக ஒரு இன்னிங்ஸில் அதிகப்படியான எதிரணி வீரர்களை (5) ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றிய 5வது இந்திய பவுலராக சாதனை படைத்தார் வாஷிங்டன்.

இதற்கு முன்னர் ஜசுபாய் படேல், பாபு நட்கர்னி, அனில் கும்ப்ளே, ரவிந்திர ஜடேஜா முதலிய 4 இந்திய பவுலர்கள் ஒரு இன்னிங்ஸில் 5 வீரர்களை ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றியுள்ளனர்.

வாஷிங்டன் சுந்தர்
122 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த டிம் சவுத்தீ!

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஆட்ட நேர முடியில் இந்திய அணி ஒரு விக்கெட் 16 ரன்கள் எடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com