வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர்எக்ஸ் தளம்

2 பந்தில் 2 விக்கெட்.. த்ரில் வெற்றிபெற்ற கவுண்டி அணி.. இங்கிலாந்தில் கலக்கிய வெங்கடேஷ் ஐயர்! #Video

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர், 2 பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி, அந்த அணியை வெற்றிபெற வைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Published on

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கெனவே இந்திய வீரர்கள் சென்று விளையாடி வரும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இந்திய அணி வீரரும் கொல்கத்தா ஐபிஎல் அணியின் வீரருமான வெங்கடேஷ் ஐயரும் இணைந்துள்ளார். அவர், அங்கு லாங்கஷைர் அணிக்காக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஆக. 14) கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லாங்கஷைர் (Lancashire) மற்றும் வொர்செஸ்டர்ஷைர் (Worcestershire) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாங்கஷைர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை விளாசியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், 42 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய வொர்செஸ்டர்ஷைர் அணி, ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ரன்களை எடுத்து இலக்கை வெற்றிபெற வைக்கும் நோக்கில் விளையாடியது. இந்த நிலையில், வோர்செஸ்டர்ஷைர் அணி, 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்திருந்தது.

கடைசி 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. இக்கட்டான நிலையில் இருந்த அணியை மீட்கும் வகையில், வெங்கடேஷ் ஐயர் மீது நம்பிக்கை வைத்து, அவரை 49வது ஓவருக்கு இறக்க அணி முடிவுசெய்தது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடித்த வன்முறை.. தடயத்தை அழித்ததா மர்ம கும்பல்? ஆலியா பட் போட்ட பதிவு!

வெங்கடேஷ் ஐயர்
தோனி மட்டும் தனித்து தெரிவது ஏன்? வெங்கடேஷ் ஐயர் பகிர்ந்த ஃபீல்டிங் ரகசியம்!

அதன்படி, 49வது ஓவரை வீசிய வெங்கடேஷ், முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை வழங்கினார். தவிர, அடுத்த இரண்டு பந்துகளையும் வொய்டுகளாக வீசியதுடன், 2 ரன்களையும் விட்டுக்கொடுத்தார். இதன்மூலமாக 4 பந்துகளில் 12 ரன்களை வெங்கடேஷ் ஐயர் விட்டுக் கொடுத்ததால், வோர்செஸ்டஷைர் அணியின் வெற்றிக்கு 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் அவருடைய ஓவரில் இரண்டு பந்துகள் மிச்சமிருந்தன.

இதனால் அந்த ஓவரிலேயே வொர்செஸ்டர்ஷைர் அணி வெற்றிபெற்று விடும் என்று அவ்வணியினர் நம்பினர். அத்தோடு, வெங்கடேஷ் வீசிய 5வது பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற ஹிங்லி, பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக, கடைசிப் பந்தை வீசிய வெங்கடேஷ், அதை யார்க்கராக வீசினார். அந்தப் பந்தைக் கணிக்க முடியாத பேட்டர் ஹேரி டார்லே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி லாங்கஷைர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன்மூலம், வெங்கடேஷ் ஐயர் அவ்வணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

இதையும் படிக்க: தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

வெங்கடேஷ் ஐயர்
15 வருடத்திற்கு பிறகு KKR-க்கு 2வது சதம்! மெக்கல்லம்மை தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் செய்த சம்பவம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com