2021, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை தொடர்ந்து, இந்திய அணி 2025 WTC இறுதிப்போட்டிக்கும் நிச்சயம் முன்னேறிவிடும், இந்தமுறை இந்திய அணி கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, சொந்த மண்ணில் பறிகொடுத்திருக்கும் இந்தியா, WTC இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் நிச்சயம் 4 போட்டிகளில் வென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது.
இதில் சோகம் என்னவென்றால் நடப்பு WTC சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடவிருக்கிறது இந்திய அணி. 5 போட்டியில் 4-ல் வென்றால் மட்டும் தான் இந்தியா WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா? அப்படியென்றால் ஆஸ்திரேலியாவை எப்படி அவர்களின் மண்ணில் வைத்து அவ்வளவு பெரிய வெற்றியை பெறமுடியவில்லை, வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் தோன்றும்.
ஆனால் அந்த ஒரு வாய்ப்புடன் சேர்ந்து மொத்தம் 3 வாய்ப்புகள் இந்திய அணிக்கு இருக்கின்றன.
* மற்ற அணிகளை சார்ந்து இல்லாமல் இந்திய அணி நேரடியாக WTC இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமானால், ரோகித் சர்மா தலைமையிலான குழுவானது மீதமுள்ள ஐந்து போட்டிகளில் மற்றொரு தோல்வியை சந்திக்க கூடாது.
அதாவது தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 4-0 அல்லது 5-0 என்று இந்திய அணி சாதிக்க வேண்டும். ஒரு போட்டியில் டிரா செய்து 4 போட்டியில் வெற்றிபெறவேண்டும் அல்லது 5 போட்டியிலும் வெற்றிபெற வேண்டும்.
*ஆனால் மற்ற அணிகளை சார்ந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவை, இருப்பினும், இது போதுமானதாக இருக்காது, ஏனெனில் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் இந்திய அணிக்கு பாதகமாக அமையலாம்.
இருப்பினும் இந்திய அணி PCT புள்ளியை 60%-க்கு மேல் பராமரிக்க வேண்டும் என்றால், அதற்கு நிச்சயம் இந்தியா குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு ஆட்டங்களை டிரா செய்ய வேண்டும்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் வெற்றிபெறத் தவறினால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இலங்கை-ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா-இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் இடையேயான தொடரை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இதுவெல்லாம் கண்காணிக்க வேண்டுமென்றால் முதலில் ஆஸ்திரேலியாவில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றிபெறவேண்டும். அப்படி வெல்லவில்லை என்றால், WTC இறுதி வாய்ப்புகளுக்கு குட்-பை செய்துவிட்டு இந்தியா வெளியேறலாம்.