தமிழ்நாடு அணி: ரஞ்சி கிரிக்கெட் தொடருக்கு சாய் கிஷோர் கேப்டன்.. அபராஜித் இல்லாததால் விமர்சனம்!

2023-24ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு, சாய் கிஷோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய் கிஷோர்
சாய் கிஷோர்ட்விட்டர்
Published on

2023-24ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணி, நேற்று அறிவிக்கப்பட்டது. இவ்வணியின் கேப்டனாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பிரதோஷ் ரஞ்சன் பால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு 2016-17ஆம் ஆண்டுக்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதைக் கருத்தில்கொண்டு இந்த இளம்படை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், அனுபவம்வாய்ந்த பி.அபராஜித் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், இடம்பிடித்துள்ளார். அதுபோல் ஆல்ரவுண்டர் எம்.முகமதுவும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனினும் இவ்வணிக்கு சாய் கிஷோர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மும்பை அணியில் இருந்து விலகினாரா சச்சின் டெண்டுல்கர்? உண்மையில் நடந்தது என்ன?

தற்போது தென்னாப்பிரிவிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக 2 அரைசதங்களை அடித்துள்ளார். முன்னதாக, தாம் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே, அரை சதமடித்த 4ஆவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்தார். ஏற்கெனவே டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அறிமுகமான அவர், 2023 இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

அதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றிபெற வைத்த அவர், கவுண்டி முதல் ரஞ்சி கோப்பை வரை அனைத்து விதமான உள்ளூர் தொடர்களிலும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதையடுத்து, தமிழ்நாடு ரஞ்சி அணிக்கு அவரை கேப்டனாகத் தேர்வு செய்யப்படலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், அவரை கேப்டனாக தேர்வு செய்யாதது விமர்சனமாகி உள்ளது.

இதையும் படிக்க: ஒரே நாளில் 78: மக்களவையில் திமுக, காங். உள்ளிட்ட 33 பேர், மாநிலங்களவையில் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

அணி தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் யு.ஆர்.ராதாகிருஷ்ணன், “நாங்கள் எதிர்காலத்திற்காக ஒரு குழுவை உருவாக்க விரும்புகிறோம். அதற்காக இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சிக் கோப்பைக்கான அணியில், சாய் கிஷோர் (c), பிரதோஷ் ரஞ்சன் பால் (vc), வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், N.ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், லோகேஷ்வர், அஜித் ராம், சச்சின், முகமது, சந்தீப் வாரியர், டி.நடராஜன், விமல் குமார், திரிலோக் நாக் உள்ளிட்ட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com