சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்எக்ஸ் தளம்

ரோகித் பற்றிய பேச்சே இல்லை.. ஆனா SKY-ஐ விடாத மும்பை இந்தியன்ஸ்.. வெளியான தகவல்!

ரோகித் சர்மா குறித்து எந்த தகவலையும் அறிவிக்காத மும்பை அணி, சூர்யகுமார் யாதவ் விஷயத்தில் மவுனத்தைக் கலைத்துள்ளது. ஆம், இதுதொடர்பாக அந்த அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் சூர்யகுமார் யாதவ்வை அந்த அணி விடுவிக்கவில்லை என உறுதியாகியுள்ளது
Published on

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அவ்வணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. அவர், கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்களே விரும்பவில்லை. இதனால் தொடரின் ஆரம்பம் முதலே ரசிகர்களின் எதிர்ப்பைச் சந்தித்தார். தவிர, அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இல்லை. ரோகித்திற்கு அடுத்த இடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் முதலிய வீரர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

இதனால் அந்த அணி, கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் எதிர்வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின்போது மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறுவார் என்ற தகவல் 2024 ஐபிஎல் தொடரிலிருந்தே இருந்துவருகிறது. தற்போது ரோகித்தை அணிக்குள் கொண்டுவர லக்னோ மற்றும் டெல்லி முதலிய அணிகள் போட்டிபோடுவதாக தகவல் வெளியான நிலையில், மற்றொரு மும்பை வீரரான சூர்யகுமார் யாதவும் கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க: தொடர்ந்து 10ஆண்டுகள்! மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து 50 பேரை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கணவர்!`

சூர்யகுமார் யாதவ்
ரோகித்தை தொடர்ந்து MI-க்கு குட்பை சொல்லும் சூர்யகுமார்? கேப்டன்சி ஆஃபர் கொடுத்த KKR! வெளியான தகவல்!

ஏனென்றால், இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்புக்கு வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி (டி20 போட்டி) அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாடுவது சரியாக இருக்குமா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கெனவே ரோகித் சர்மா குழப்பமே தீராத நிலையில், சூர்யகுமார் யாதவின் இடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது மும்பை அணிக்கு தலைவலியை கொடுத்தது.

இந்த நிலையில், ரோகித் சர்மா குறித்து எந்த தகவலையும் அறிவிக்காத மும்பை அணி, சூர்யகுமார் யாதவ் விஷயத்தில் மவுனத்தைக் கலைத்துள்ளது. ஆம், இதுதொடர்பாக அந்த அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் சூர்யகுமார் யாதவ்வை அந்த அணி விடுவிக்கவில்லை என உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகி ஒருவர், ”சூர்யகுமார் யாதவ் மும்பை அணியைவிட்டு வெளியேற மாட்டார். சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பவே இதுபோன்ற செய்திகளை சிலர் வெளியிட்டுள்ளனர்” என ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சூர்யகுமார் யாதவ் வேறு அணிக்குச் செல்லவில்லை என்றாலும், அவருக்கான ஊதியத்தை எப்படி மும்பை அணி நிர்வாகம் கொடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும் என்பதோடு, ரீடெய்ன் செய்யும் முதல் 2 வீரர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களுக்கான ஊதியத்தை அளிக்க முடியும்.

இதையும் படிக்க: நெசமாத்தான் சொல்றீங்களா!! 12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடம் மட்டுமே உறக்கம்.. அசத்தும் ஜப்பானியர்!

சூர்யகுமார் யாதவ்
“சூர்யகுமார் கேட்ச்சை இப்படி செக் பண்ணிருந்தா நாங்க வென்றிருப்போம்” - வீடியோ ஒன்றை பகிர்ந்த SA வீரர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com