”அது 7 சிக்சர்களாக இருந்திருக்க வேண்டும்..” - 17 ஆண்டுக்கு பின் பிராட் வெளிப்படுத்திய உண்மை!

2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துக்கு 6 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங். அந்த நிகழ்வின் 17-ம் ஆண்டு நினைவு நேற்று கொண்டாடப்பட்டது.
யுவராஜ் சிங் 6 சிக்சர்கள்
யுவராஜ் சிங் 6 சிக்சர்கள்web
Published on

உலக கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கப்பட முடியாத சாதனைகள் என, பல அரிய சாதனைகள் இருந்துவருகின்றன. அதில் அதிக ரன்கள், குறைவான பந்துகளில் சதங்கள், அரைசதங்கள் என பல இருந்தாலும், இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில் எந்த சாதனை முறியடிக்கப்பட முடியாத சாதனை என்று கேட்டால், முதலில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை சொல்லும் அனைவரும், அடுத்து யுவராஜ் சிங் அடித்த 12 பந்துகளில் அரைசதம் என்ற சாதனையை தான் கூறுவார்கள்.

yuvraj 6 sixes
yuvraj 6 sixes

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 லீக் போட்டி டர்பனில் நடைபெற்றது. அந்த போட்டியில் 19வது ஓவரை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீச, இந்திய அதிரடி மன்னன் யுவராஜ் சிங் எதிர்கொண்டார். சந்தித்த 6 பந்துகளையும் 6 சிக்ஸர்களாக மாற்றி மைதானத்தின் நாலாப்புறமும் சிதறடித்தார் யுவராஜ் சிங். மைதானத்தில் இருந்த அத்தனை திசைகளுக்கும் பந்துகள் பறந்தன.

ஓவர் மிட் விக்கெட், பேக்வார்ட் ஸ்கொயர் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன் என எதுவும் மிச்சம் வைக்கப்படவில்லை. 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் யுவராஜ். தற்போது வரை இதுவே உலகசாதனையாக இருந்துவருகிறது. ஆட்டத்தில் மொத்தமே அவர் எதிர்கொண்டது 16 பந்துகள் தான், அதில் அடிக்கப்பட்ட ரன்களோ 58, 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என விளாசி 363.50 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்திய அணி உட்பட எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் யுவராஜ் சிங்.

அந்த நிகழ்வு உலக கிரிக்கெட்டில் நடந்து நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

யுவராஜ் சிங் 6 சிக்சர்கள்
”புற்றுநோயால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்; எங்களுக்கு தெரியவேயில்லை”- யுவராஜ் குறித்து ஹர்பஜன் உருக்கம்!

அது 7 சிக்சர்களாக இருந்திருக்க வேண்டும்..

2007-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடந்த கோரமான சம்பவம் குறித்து மீண்டும் தன்னுடைய கருத்தை ஸ்டூவர்ட் பிராட் பகிர்ந்து கொண்டார். அங்கு அவர் நோ-பால் கொடுக்கப்படாததற்கு நன்றி கூறினார், இல்லையேல் அது 7 சிக்சர்களாக இருந்திருக்கும், நான் தப்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பிராட் - யுவராஜ்
பிராட் - யுவராஜ்

ஸ்கை ஸ்போர்ட்ஸ் பகிர்ந்திருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் பிராட், “நான் அந்த போட்டியை மீண்டும் பார்த்ததில்லை. நான் இதை ஒப்புக்கொள்ள வேண்டும், அந்த ஓவரில் ஒருபந்தை நோ-பாலாக வீசினேன், அது கொடுக்கப்படாதது என்னுடைய அதிர்ஷ்டம். இல்லையேல் அது ஏழு சிக்சர்களாக மாறியிருக்கும், நான் தப்பித்துவிட்டேன்” என்று பிராட் வர்ணனை பெட்டியில் கூறினார்.

நீங்கள் எப்போதாவது அந்த வீடியோவை பார்த்திருக்கிறீர்களா என்ற கேள்வி மீண்டும் கேட்கப்பட, “இல்லை நான் பார்த்ததில்லை, இப்போதுவரை அதைப் பார்த்ததில்லை. 17 ஆண்டுகளாக அந்த வாய்ப்பிற்கு நன்றி" என்று கூறினார்.

6 சிக்சர்கள் அடித்து 17 ஆண்டுகள் நிறைவுபெற்றது குறித்து பதிவிட்டிருக்கும் யுவராஜ் சிங், “எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கும், இது போன்ற தருணங்களுக்காகவும் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று X பக்கத்தில் எழுதியுள்ளார்.

யுவராஜ் சிங் 6 சிக்சர்கள்
’எம்.எஸ்.தோனி ரெக்கார்டு முறியடிப்பு..’ வங்கதேச டெஸ்ட்டில் அஸ்வின் படைத்த 3 இமாலய சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com