5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்.. டிராவிஸ் ஹெட்டை நிற்கவைத்துவிட்டு படம்காட்டிய ஸ்டீவ் ஸ்மித்! #Viral

மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், மறுமுனையில் டிராவிஸ் ஹெட்டை நிற்கவைத்துவிட்டு வாணவேடிக்கை காட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.
ஸ்டீவன் ஸ்மித்
ஸ்டீவன் ஸ்மித்x
Published on

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்டீவன் ஸ்மித், பால் டெம்பரிங் பிரச்னைக்கு பிறகு அதிகப்படியான வாய்ப்புகள் மற்றும் சரியான இடத்தில் பேட்டிங் ஆர்டர் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட ஃபேப் 4 என கொண்டாடப்பட்ட தற்கால சிறந்த 4 வீரர்களில் ஸ்டீவன் ஸ்மித் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில்தான் அவருடைய நிலைமை தற்போது இருந்துவருகிறது.

steve smith
steve smith

இந்நிலையில் அதிரடிக்கு பெயர் போன டிராவிஸ் ஹெட்டை மறுமுனையில் நிற்கவைத்துவிட்டு, அதிரடியில் மிரட்டிய ஸ்டீவன் ஸ்மித்தின் இன்னிங்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டீவன் ஸ்மித்
ஹர்திக்கிற்கு ஏன் கேப்டன்சி இல்லை? ஜடேஜா நிலை என்ன? 2027 WC-ல் ரோகித்?- கம்பீரின் 7 முக்கிய பதில்கள்

டிராவிஸ் ஹெட் 29-க்கு 39.. ஸ்மித் 25-க்கு 51 ரன்கள்!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 20வது போட்டி சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையே தற்போது நடந்துவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வாசிங்டன் ஃப்ரீடம் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 101 ரன்களை குவித்த இந்த ஜோடி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதில் டிராவிஸ் ஹெட்டை நிற்கவைத்துவிட்டு ஸ்டீவ் ஸ்மித் ஆடிய ஆட்டம்தான் இணையத்தை கலக்கி உள்ளது.

101 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஸ்மித் 31 பந்துக்கு 56 ரன்களும், டிராவிஸ் ஹெட் 29 பந்துக்கு 39 ரன்களும் எடுத்தனர். 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஸ்டீவ் ஸ்மித் 25 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு இழப்புக்கு 174 ரன்களுடன் விளையாடிவருகிறது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

அதிரடிக்கு பெயர் போன டிராவிஸ் ஹெட்டை வேடிக்கைப்பார்க்கவிட்டு பெஸ்டீவ் ஸ்மித் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை இவர் இரண்டாவது முறையாக மேஜர் லீக்கில் செய்துள்ளார். முன்னதாக கடந்த போட்டியில் 23 ரன்களுக்கு அரைசதமடித்திருந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்டீவன் ஸ்மித்
மகளிர் ASIA CUP: 220 ஸ்டிரைக்ரேட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்.. 201 ரன்கள் குவித்து IND சாதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com