அதிவேகமாக 9,000 டெஸ்ட் ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்! ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்து அசத்தல்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டரான ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
Steve Smith - Rahul Dravid
Steve Smith - Rahul DravidTwitter
Published on

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரனுமான ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 85* ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். முதல் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் மோதிவருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது.

Aus Vs Eng / Ashes Test
Aus Vs Eng / Ashes TestTwitter

இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாகவே தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.

ஆனால் 73 ரன்களுக்கு பிறகு அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லபுசனேவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் போட்ட ஸ்மித் அணியை சரிவிலிருந்து மீட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இறுதிவரை களத்தில் நின்று விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித் முதல் நாள் முடிவில் 85 ரன்கள் அடித்தார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

அதிவேகமாக 9000 டெஸ்ட் ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்!

சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களை அடித்த போது 9,000 டெஸ்ட் ரன்களை கடந்தார். 174 போட்டிகளில் இந்த சாதனையை செய்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அதிவேகமாக 9,000 டெஸ்ட் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த வரிசையில் 172 போட்டிகளுடன் சங்ககரா முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 176 போட்டிகளுடன் 3ஆவது இடத்திலும், 177 போட்டிகளுடன் பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆனால் விளையாடிய போட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் 99 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 101 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி பிரையன் லாரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

15,000 ரன்களை கடந்து விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஸ்மித்!

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என ஒட்டுமொத்தமாக 15,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். மொத்தமாக 49.67 சராசரியுடன் இந்த சாதனையை படைத்திருக்கும் ஸ்மித், 53.44 சராசரியுடன் இருக்கும் விராட் கோலியை பின் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார்.

மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்து, 20 வருடங்களுக்குப்பின் அசத்தியுள்ளார் ஸ்மித்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com