இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தென்னாப்பிரிக்காவின் க்கெபர்ஹா பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி நடைபெற்றறது.
இதில், டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது தென்னாப்பிரிக்கா. பேட்டிங்கில், கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சனை 0 ரன்னில் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்த யான்சன் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அதற்கு பிறகு வீசிய அனைத்து பவுலர்களும் டைட்டாக பந்துவீச, ரன்களை சேர்க்க முயன்ற இந்திய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
சஞ்சு சாம்சன் 0, அபிஷேக் சர்மா 4 மற்றும் சூர்யகுமார் 4 ரன்கள் என வெளியேற அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டிய அக்சர் பட்டேல் ரன்களை எடுத்துவந்தார். அபாரமான ஃபீல்டிங் மற்றும் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டை எடுத்துவந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை இழுத்து பிடித்தது.
ஹர்திக் பாண்டியா இறுதிவரை நிலைத்து நின்றாலும் அவரால் 45 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஒருவர் கூட 7 ரன்கள் என்ற எகானமியை எட்டாமல் பந்துவீசினர். 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டன.
பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா 19 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.